துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அனல் பறக்கும் பிராச்சாரம் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் படி ராமநாதபுரம் மாரளுமன்ற தேர்தலில் கூட்டணிகட்சி வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க காலை 11 மணிக்கு திருவாடானை சின்னகீரமங்கலத்திற்கு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் சரியாக 2.15 மணிக்குதான் தமிழக துணை முதல்வர் வந்தார் அதுவரை பொது மக்களும் கட்சி பிரமுகர்களும் வெயிலில் காத்து நின்றனர். பெண்கள் தாங்கள் வைத்திருந்த பையை தலைக்கு வைத்துக்கொண்டும், சேலையால் தலையால் மூடிக்கொண்டும் கால்கடுக்க நின்றனர். துணை முதல்வர் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது திருவாடானை பகுதி விசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையினை வழங்காத நிலையில் அதை பற்றி கேட்டுதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதில் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய சலசலப்பு அடங்கிய பிறகு பயிர் காப்பீடு தொகை ஒருவாரத்தில் அணைவரது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறினார்.

மீண்டும் இப்பகுதிக்கு வந்து பயிர்காப்பீட்டு தொகை ஏறிவிட்டதா என்று கேட்டுச் செல்வேன் என்றும் பேசினார். அதன் பிறகு பேச்சை தொடர்ந்தவர் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று கூறினார். இந்த கேள்வியை கேட்டதே அஇஅதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துவங்கும் போது மாண்புமிகு தொப்புல அமைச்சர் என்று வாய்தவறி கூறிவிட்டு பின்னர் சரி செய்து தொழில் நுட்ப அமைச்சர் என்று திருத்தி குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த போது சலசலப்பு குறையாத நிலையில் ஒரு தொண்டர் மீண்டும் கேட்க அவர்களை அஇஅதிமுக சிலர் அடிக்க முற்படும் போது துணை முதல்வர் அவர்கள் அடிக்காதீர்கள் அவர் கேட்க உரிமை உள்ளது விடுங்கள் என்று கூறினார். பின்னர் காவல் துறையினர் சரிசெய்தனர். அப்போது பேசிய துணை முதல்வர் கூறுகையில் எதிர்கட்சி தலைவர் தற்போது பயத்தின் உச்சத்திற்கு சென்றதால் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை மரியாதை குறைவாக தரம் தாழ்ந்து போடா வாடா ரவுடிப்பய, கேடிப்பய என்று தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இந்த பேச்சை தமிழக மக்கள் ரசிக்கவில்லை என்று கூறினார். இது தரமற்ற பேச்சு என்றும் கூறினார். ஸ்டாலினுக்கு தீராத ஆசை எப்படியாவது தமிழக அமைச்சராக ஆகிவிட வேண்டும் என்பது ஆனால் அவர் அப்பாவாலே முடியாமல் போனது ஸ்டாலினாலும் முடியாது அவர் கணவு பலிக்காது என்றும், புயல் சுனாமி அடித்த போதெல்லாம் நாம் அங்கு நேரிசென்று பணி செய்து வருகிறோம். சுனாமி நம் பகுதிக்கு வந்த போது பாலங்கள் அடித்து செல்லப்பட்டு பல உயிர்கள் போன சமயத்தில் நேரில் பார்க்க வந்தேன் என்று கூறும் போது சனவேலி என்று கோரசாக கூறிய பிறகு சனவேலி என்று கூறினார். இந்த கட்சி அது பல ஆயிரம் விழுதுகள் கண்ட ஆலமரம் இது புயலடித்தாலும் சுனாமியே வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் தமிழகத்தை தீ வைத்துவிட்டார்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. நாங்கள் என்ன தீ பந்தத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறோமா? என்று கேலியாக பேசினார். கோவில்பட்டி பிரச்சாரத்தின் போது இரண்டு வயது குழந்தை என்னை தாத்தா என்று கூறி இரண்டு விரலை காண்பித்தது என்று கூறினார் அது எதுக்கு என்பதை விளக்கும் முன்பு சிலர் கூச்சலிட்டனர். இந்த வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

செய்தி -அனல் ஆனந்த் ஆடானை


Leave a Reply