‘கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்!’ விரைவில் விசாரணை: முதல்வர் தடாலடி அறிவிப்பு

Publish by: --- Photo :


உதகை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்து, திமுக தலைவரானவர் மு.க. ஸ்டாலின் என்று, உதகையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

S

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உதகையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் மீது பரப்பரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் பேசியதாவது: அரசியலில் தான் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாக அவரை வீட்டுச்சிறை வைத்தவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதிக்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக அவர் பேசியிருப்பார் என்று திமுகவினரே கூறுகின்றனர்.

 

திமுக தலைவராக வேண்டும் என்பதற்காக கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். கருணாநிதிக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ளும் என்றார்.

 

ஸ்டாலின் மீதான முதல்வரின் குற்றச்சாட்டும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*


Leave a Reply