கெங்கவல்லி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சொக்கனூர் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு மற்றும் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சொக்கனூர் பகுதியில், 10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கிராம மக்கள் துவங்கியுள்ளனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோல் தேர்தல் புறக்கணிப்பு செய்தோம்,அப்பொழுது வந்த அதிகாரிகள் விரைந்து முடித்து தருவதாக சமாதானம் கூறிவிட்டு சென்றனர்.ஆனால்,
கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, இடுகாடு வசதி, இடுகாடு பராமரிப்பு மற்றும் பாதை வசதி, அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்தல்,மேட்டூர் குடிநீர் குழாய் இணைப்பு, ஆழ்துளை கிணறு அமைத்தல், பொது நூலகம் கட்டிக் கொடுத்தல்,உள்ளிட்ட பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித பயனும் இல்லை.
இந்தநிலையில் இன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 9 மணி முதல் இந்தப் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.


Leave a Reply