திருப்பூா்; டிரான்ஸ்பார்மரில் உள்ள மோடி மற்றும் எடப்பாடி  படங்களை அகற்ற வேண்டும்- தொமுச சார்பில் புகாா்

Publish by: --- Photo :


திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் சிறியதாக ஒரே மின் கம்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது அந்த டிரான்ஸ்பார்மரில் அரசு விளம்பர போர்டு வைக்கப்பட்டது அதில் பிரதமர் மோடி, மறைந்த முதுல்வா் ஜெ ,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, படங்கள்  டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடம் பெயர் எண்கள், உள்ளிட்டவைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளதால் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் படங்கள் பொது இடங்களில் பொது பார்வைக்கு இருக்க கூடாது, ஆனால் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் பொறித்த விளம்பர போர்டு காணப்படுகிறது. 

இது குறித்து திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் கடந்த வாரம் புகார் தெரிவிக்கப்பட்டடது.
இது குறித்து செய்திகள்பத்திரிகைகளில் வெளிவந்ததை தொடர்ந்து சில இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் மட்டுமே கண் துடைப்புக்காக அகற்றப்பட்டது ஆனால் தற்போது வரை பல்வேறு இடங்களில் மின்வாரிய டிரான்பார்மரில் பிரதமர் முதல்வர் படங்கள் பொறிக்கப்பட்டுள்ள போர்டு காணப்படுகிறது.
குறிப்பாக திருப்பூர் அவினாசி கோடடத்திற்குட்பட்ட திருமுருகன் பூண்டி கிழக்கு ரிங் ரோட்டிலுள்ள மாதேஸ்வரன் கோயில் அருகில் அமைந்துள்ள டிரான்பார்மரில் பிரதமர் முதல்வர் படங்கள் பொறித்த விளம்பர போர்டு அகற்றப்பட வில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்ப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு டிரான்பார்மரில் உள்ள பிரதமர் , முதல்வர் படங்கள் பொறித்த விளம்பர போர்டு அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply