பூந்தமல்லி அருகே காரில் ரூ.6½ லட்சம் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி..!

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்-பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ரூ.6.5 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் இந்த பணம் டாஸ்மாக் கடையில் வசூலானது என்பது தெரிந்தது.

இதற்கான ஆவணம் காரில் இருந்தவர்களிடம் இல்லை. பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த இந்திரஜித், கார்த்தி ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply