திருவாடானை எல்லைக்குள் தொல்லை! பறக்கும் படையினரின் செயலால் பரிதவிக்கும் பொதுமக்கள்…

திருவாடானை தாலுகாவில் பறக்கும் படை யினரின் வாகன சேதனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகளின் பரப்புரைகள் சூடு பறந்து வருகிறது. இந்நிலையில் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வண்ணம்.. தனியாக மூன்று பறக்கும் படை குழுவும், கண்காணிப்பு நிலைக் குழுவும் அமைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையினர் பிரிவில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர், இரண்டு காவலர், ஒரு தாசில்தார், ஒரு வீடியோ கிராபர் உள்பட 5 பேர்கள் உள்ளனர். இதுவரை பல லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்கள், கருவாடு விற்பனை செய்வோர், ஆடு, மாடு வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள், நகை கடை உரிமையாளர்களுடையது. ஆனால் இதுவரை எந்த கட்சி பிரமுகர்களின் பணமும் வேட்பாளர்களின் பணமும் பிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை சோதனை செய்வது என்ற போர்வையில் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடும்போது வாகனத்தில் இருக்கும் பொருட்களை சிதற அடிப்பதோடு ஆங்காங்கே கலைத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகின்றார் அதனை சரி செய்து தங்களது பயணத்தை தொடர்வதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இது குறித்து கேட்டால் தேர்தல் பறக்கும் படையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 07 ஏப்ரல் இரவு திருவாடானையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் குமார் என்பவர் தனது காரில் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நேரம் இரவு 10 மணி அளவில் திருவாடானை அருகே பாரூர் கிராமத்தில் திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வாகனத்தை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிடும் போது வாகனத்தில் இருந்த பைகளை எடுத்து திறந்து வீசினர். அதற்கு குமார் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எவ்வித பதிலும் கூறாமல் ஒழுங்கா ஒத்துழைப்புத் தாருங்கள் இல்லை உங்கள் மேல் வழக்கு பதிவு செய்து விடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் சோதனையின் போது வீடியோகிராபர் பணியில் இருக்கும் நபர் நடக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்வது மட்டும்தான் அவர் வேலை ஆனால் அவரும் பைகளை சோதனை இடுவதும் பொதுமக்களை மிரட்டும் விதமாக சேதனன செய்து வந்ததாக கூறுகிறார் இதுகுறித்து தேர்தல் இவர்கள் மீது தமிழ்நாடு ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களுக்கும் புகார் கொடுக்கப் போவதாக தெதிவித்தார். தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்கானிப்பு நிலைக்குழுவினர் வேட்பாளர்கள் வரும் போது 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருகின்றனர். வேட்பாளர்களை கிராம மக்கள் வரவேற்க ஆராத்தி எடுப்பவர்களுக்கு ௹பாய்500க் மேல் வழங்குகிரார்கள். அதை இந்த தேர்தல் பறக்கும் படையினர் கண்டு கொள்வதில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்களை வரவேற்க வெடி வெடிக்கின்றர் அவர்கள் மீதும் தேர்தல் அதிகாரிகள் புகார் கொடுப்பதில்லை மாறாக பொது மக்களையும் வாக்காளர்களையும் சோதனை செய்வதாக வேதனைக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் திருவாடனைப் பகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளகளின் ஆய்வு செய்தது கிடையாது, ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வரும் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்தது கிடையாது.

ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் ஆனந்த் ஆகியோர்கள் வாக்கு சேகரிக்கும் போது 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருவதும் தாங்கள் செல்லும் பகுதியில் வெடி வெடிப்பது ஆராத்தி எடுப்பவர்கள் பணம் வழங்குவதும் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடுகிறார்கள் அதை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு குழுவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கும் வகையில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் பறக்கும்படையினர் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டும் அதை திருவாடனைப் பகுதி தேர்தல் பறக்கும் படையினர் கண்டுகொள்வதாகவே இல்லை மாறாக பொது மக்களை துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.

செய்தி  -அனல் ஆனந்த் ஆடானை


Leave a Reply