மேட்டுப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஓட்டு வேட்டை!

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக அதிமுக வைச்சேர்ந்த தியாகராஜன் அறிவிக்கப்பட்டு தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் மேட்டுப்பாளையம்,ஓடந்துறை,வச்சினம்பாளையம்,ஊமப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

அதிமுக அரசின் சாதனைகளையும்,மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகளையும் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்தார்.பிரச்சாரத்தின் போது மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்..


Leave a Reply