சென்னை: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மேக்- அப் போட்டுக் கொள்ளவே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பிரசாரத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக, உடன்பிறப்புகள் புலம்புகின்றனர்.
திமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருப்பவர் தமிழச்சி தங்கபாண்டியன். பிரசாரத்தின் போது இவரை அழகான வேட்பாளர் என்று உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்தது பரபரப்பாக பேசப்பட்டது.
அதை தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியனின் விதவிதமான மேக்- அப், பல்வேறு கோணங்களில் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, வைரலானது.
இந்த சூழலில், தமிழச்சி தங்கபாண்டியனுடன் பிரசாரத்துக்கு செல்லும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவர் மீது சற்று அதிருப்தியில் உள்ளனர். வெயில் சூடு தெரியாமல் இருக்க காலை 7 மணிக்கெல்லாம் பிரசாரம் தொடங்கலாம் என்று அவர்கள் எல்லோரும் புறப்பட்டு நிற்கின்றனராம்.
ஆனால், தமிழச்சியோ மேக்- அப் போட்டுக் கொள்ளவே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். இதனால் பிரசாரத்துக்கு கிளம்புவதற்குள் மணி 9 ஐ கடந்து விடுகிறது என்று, திமுகவினர் சலித்துக் கொள்கின்றனர். வேறுவழியின்றி மண்டையை பிளக்கும் வெயிலில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதாக, அவர்கள் நொந்து கொள்கின்றனர்.
*