கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை?குற்றவாளிகள் குறித்து விசாரணை தீவிரம்!

கோவை மாவட்டம்
பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டியில், பிரகதி(20) என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி பிரகதி, நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இன்று காலை மாணவி காணாமல் போனதாக அவர் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.மாணவியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி மற்றும் காதில் உள்ள தங்கத்தோடு அப்படியே உள்ளதால் நகைக்காக இக்கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை.எனவே,மாணவி கொலையில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது பாலியல் விவகாரத்தால் மாணவி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவி பிரகதி கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே,பொள்ளாச்சி பிரச்சினையில் தமிழகமே வெகுண்டெழுந்த நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply