பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது !

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்
பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அதே ஜெயலலிதாவால், டம்மியாக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில் மோடி முன்னிலையில் தன்னை பிஜேபியில் ஐக்கியப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு, மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இது போக ராஜ்யசபா எம்.பி.யாக்குவதாக வாக்குறுதியையும் கொடுத்தது பிஜேபி. மேலிடம். மோடி ஆட்சி முடியப் போகும் இந்த நேரம் வரை ராஜ்யசபா MP. ஆக முடியாததால், லோக்சபா MPயாகி விடுவது என்ற கணக்கில் குதி்த்துள்ளார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன் தலைமையில், கீழக்கரை பகுதியில்
பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது கீழக்கரை இஸ்லாமியர்கள் அனைவரும் அவருக்கு எதிராக கோஷமிட்டு தெரிவித்தனர், தொடா்ந்து ஓட்டு சேகரிக்க உள்ளே விடாததால், பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply