10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை- மூவரின் தூக்கு தண்டனை ரத்து

தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின் மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தண்டனை வழங்கப்பட்டது. அதில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து மூவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது. மேலும் கொலையான சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply