ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் – 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistanmilitant #militantskilled

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் – 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.


பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில், வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை மற்றும் மோதல்களில் இருதரப்பிலும் பலர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வடக்கு பகுதியில் உள்ள படாக்‌ஷா மாகாணத்தில் 12 பயங்கரவாதிகளும், கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் 13 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Reply