கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவன் கைது

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், பிளஸ்-2 மாணவர், ஆட்டோ டிரைவர் உள்பட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வினியோகம் செய்தனர்.
இந்நிலையில், கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, 7 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply