கவர்ச்சி உடையில் கணவருடன் கப்பலில் குத்தாட்டம் போட்ட நடிகை

ப்ரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னரும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பது, வெப் சீரிஸில் நடிப்பது என வழக்கமான தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் ஓய்வு நேரத்தில், தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி தீவில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது கப்பலில் கணவருடன் கவர்ச்சி உடையில் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Leave a Reply