தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு மணமாகி 9 மாதங்களாகிறது. இந்நிலையில், நேற்றிரவு அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தகராறை தாயார் சமாதான படுத்த முயற்ச்சித்தும் கைகலப்பு தொடர்ந்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணனாகிய சதீஷ், தம்பி ரமேஷை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக சதீஷை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply