விருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி

விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்றதில் விபத்து நிகழ்ந்துள்ளது
நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி இருக்கிறது. இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விருதுநகரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Leave a Reply