“விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல!” – சூர்யா

“எனக்கு ஒரு நடிகருடைய பையன்ங்கிற அடையாளம் இருக்கு. ஆனா, எதுவுமே இல்லாம உறியடிங்கிற படத்தை இவரால எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு எனக்கு பிரமிப்பு இருந்தது. இது வெறும் திரைதான். இதுல ஒரு நிஜமான விஷயம் வந்துச்சுன்னா அதுக்கு ஆயுள் ரொம்ப ஜாஸ்தி. அந்த மாதிரியான ஒரு நிஜம்தான் உறியடி முதல் பாகம்.”சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் இயக்கி நடிக்கும் படம், `உறியடி 2′. கூடிய விரைவில் படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விஜய் குமார், சூர்யா, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, மெட்ராஸ் சென்ட்ரல், பரிதாபங்கள் புகழ் சுதாகர், ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், எடிட்டர் லினு, மற்ற டெக்னிக்கல் டீம் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டனர்முதலில் பேசிய கோவிந்த் வசந்தா, “எல்லாருக்கும் வணக்கம். தமிழ் சரியாப் பேச வராது. அதனால முன்னாடியே மன்னிப்பு கேட்டுக்குறேன். `உறியடி 2′ படத்துல வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விஜய் குமார் எனக்கு போன் பண்ணி `உறியடி 2′ பத்தி பேசினப்போ `96′ படத்துக்கான கம்போஸிங்கூட அப்போ ஆரம்பிக்கலை. `96′ படத்துக்கு முன்னாடியே என்னை நம்பி இந்தப் படத்துல கமிட் பண்ணார். இது எனக்குப் பெரிய அங்கீகாரம். 2டி தயாரிப்பு, இந்தப் படத்துல எனக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுத்துச்சு. ஒரு சீன், ஒரு பாட்டுகூட என்னனு கேட்கலை. படம் முடிச்சதுக்கு அப்புறம்தான் எல்லாத்தையும் பார்த்தாங்க. அந்தளவுக்கு நம்பிக்கை வெச்சுருந்தாங்க. `உறியடி 2′ கண்டிப்பா உங்களை திருப்திப்படுத்தாது. அதுக்கு எடுக்கப்பட்ட படம் இது இல்லை. இந்தப் படம் பார்க்கிறவங்க கண்டிப்பா கொஞ்ச நாளைக்கு தூங்க முடியாது. அந்தளவுக்கு இந்தப் படம் உங்களை டிஸ்டர்ப் பண்ணும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விஜய் அண்ணாவால மட்டும்தான் இதைப் பண்ண முடியும்” என்று பேசி முடித்தார் கோவிந்த் வசந்தாஅவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும் நடிகருமான விஜய் குமார், “எல்லாருக்கும் வணக்கம். வேலை பார்த்துட்டே இருந்ததால என்ன பேசுறதுன்னு தெரியலை. இது மோகன் லால் சார் சொல்ற மாதிரிதான், ‘அடுக்கு மொழியில் பேசத் தெரியுமா? தெரியாது. துல்லத் தமிழ்? தெரியாது. ஆனா உண்மையை மட்டும் பேசத் தெரியும்’னு சொல்லியிருப்பார். அதனால் உண்மையை பேசணும். அவ்வளவுதான். விழாவுடைய நாயகன் கோவிந்த வசந்தாவிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவர் என்னைப் பாராட்டினார், பதிலுக்கு நான் அவரை பாராட்டணும்னு இல்லை. பொதுவா, ஒரு தயாரிப்பாளரும், இயக்குநர் இசையமைப்பார்கிட்ட சில விஷயங்கள் எதிர்பார்ப்பாங்க. அப்படி எதிர்பார்த்த எல்லாமே கோவிந்த்கிட்ட இருந்தது. நைட்டாகட்டும், பகலாகட்டும்… எப்போ போன் பண்ணாலும் பேசுவார். நம்ம சொல்றதை அப்படியே உள் வாங்கி அதுக்கும் மேல ஒண்ணு கொடுப்பார். இந்தப் படத்துல மூணு பாட்டு, ஒரு கவிதை. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அடுத்ததாக சூர்யா சார். மக்கள் மேலையும், சினிமா மேலையும் பேரன்பு கொண்டவர். `சூர்யா சார், உங்களுடைய நம்பிக்கையை இந்தப் படம் கண்டிப்பா நிறைவேற்றும்!’ அதுக்கான உழைப்பை நாங்க எல்லாரும் கொட்டியிருக்கோம்அப்புறம் தமிழ் சினிமாவுல தொய்வில்லாம படம் பண்றது ரொம்ப கஷ்டம். ஒரு 200 படம் வெளி வருதுன்னா அதுல ஒரு 150 படங்களுக்கு பிரச்னை இருக்கும். அது எவ்வளவு வலி கொடுக்கும்னு எனக்குத் தெரியும். இப்போ அந்த மாதிரி இல்லை” என்று சொன்னவர் எமோஷனல் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு பேசியவர், “நான் இப்படிலாம் பேசணும்னு வரலை. எதுவா இருந்தாலும் நம்ம படம் பேசட்டும்ங்கிறதுதான் சிந்தனை. சில விஷயங்கள் சொல்லி ஆகணும். 2டி நிறுவனம் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும். இதை நேற்றுதான் அவர்கிட்ட சொன்னேன். ஒரு உயிரை டாக்டர் காப்புத்துறது அவங்களுடைய கடமை. ஆனா அந்தக் காப்பத்தப்பட்ட உயிருக்குதான் தெரியும், அவர் எவ்வளவு முக்கியம்னு. அது மாதிரிதான் எனக்கு ஒவ்வொரு பத்திரைக்கையும். எல்லாருக்கும் ரொம்ப நன்றி. டெக்னிக்கல் டீமுக்கு நன்றி சொல்லி படத்தை எனதாக்கிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. படத்துல வேலை செய்த ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் சொந்தம். உறியடி 2 படத்துக்கு நீங்க செலவு பண்ற நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் நூறு சதவிகிதம் மதிக்கிற ஒரு படமா இருக்கும், நன்றி!” என்று பேசி முடித்தார் விஜய் குமார்
இறுதியாகப் பேசிய நடிகர் சூர்யா, “எல்லாருக்கும் காலை வணக்கம். என்னுடைய பட ரிலீஸ்க்குதான் பார்க்கணும்னா ரொம்ப நாள் ஆகுது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல உங்ககூட பேசுறது ரொம்ப சந்தோஷம். இந்த விழாவுடைய நாயகன், கோவிந்த் வசந்தாகிட்ட இருந்து ஆரம்பிச்சுடுலாம். கேரளாவுல ஒரு நிகழ்ச்சியிலதான் அவரைப் பார்த்தேன். கொஞ்சம் பேசினோம். இப்போ எனக்கு முன்னாடி அவர், `இந்தப் படம் உங்களைத் திருப்திப்படுத்தாது, பெரிய தாக்கத்தைக் கொடுக்கும்’னு சொன்ன தெளிவான வார்த்தைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பொதுவா நான் என்ன பண்றேனோ அதுக்குக் காரணம் என்னைச் சுத்தி இருந்த டெக்னிக்கல் டீம்தான். அப்படி இருக்கும்போது அவங்களுடைய வேலையில நான் தலையிடுற அளவுக்கு இன்னும் பக்குவப்படலை, அது வேண்டாம்னும் நினைக்கிறேன். எனக்கு ரசிக்கப் பிடிக்கும், நடக்குற நல்ல விஷயங்கள்ல என்னுடைய சப்போர்ட் அவங்களுக்குக் கிடைக்கும்.
அடுத்தது விஜய்குமார். நானும் ராஜாவும் இவரைப் பத்திப் பேசிக்கிட்டோம். `விஜய்யும் நம்மை மாதிரியேதான். ரொம்ப வெளிக்காட்ட மாட்டப்ல போல. நம்மதான் சில விஷயங்கள் தயாரிப்புல இருந்து பண்ணணும்’னு சொல்லிட்டிருப்பேன். முதல் முறையா இவரைப் பார்க்கும்போது எல்லாமே இவர்கிட்ட பேசத் தோணுச்சு. நிறைய பேசினோம், பகிர்ந்தோம். அப்புறம்தான் நான் `உறியடி’ படம் பார்த்தேன். எனக்கு ஒரு நடிகருடைய பையன்ங்கிற அடையாளம் இருக்கு. ஆனா, எதுவுமே இல்லாம உறியடிங்கிற படத்தை இவரால எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு எனக்கு பிரமிப்பு இருந்தது. இது வெறும் திரைதான். இதுல ஒரு நிஜமான விஷயம் வந்துச்சுன்னா அதுக்கு ஆயுள் ரொம்ப ஜாஸ்தி. அந்த மாதிரியான ஒரு நிஜம்தான் உறியடி முதல் பாகம். இந்தப் படம் நிறைய பேருக்கு போய்ச் சேரணும். `உறியடி’ படத்துடைய பேனர்ல சின்னதா சூர்யாவும் 2டியும் வர்றது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் ரொம்ப தாக்கத்தைக் கொடுக்கும். எப்பவும் போல உங்களுடைய நியாயமான தீர்ப்பைக் கொடுங்க. நன்றி!” என்று பேசி முடித்தார்.


Leave a Reply