‘தலைவி’ படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா?

சென்னை: தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அந்த படம் நிச்சயம் ஹிட்டாகும். ஏ.எல். விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார். தலைவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். கங்கனா எந்த வகையில் ஜெயலலிதா போன்று இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பத் துவங்கிவிட்டனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்த பேச்சு தான்.
ஜெயலலிதா:
கங்கனா ஜெயலலிதாவாக நடித்தால், ரித்திக் ரோஷனை கருணாநிதியாக நடிக்க வைங்க என்று ஒருவர் விளாசியுள்ளார். சரியான ஆள் இல்லை இரும்பு மனுஷி ஜெயலலிதாவாக நடிக்க தமிழ் நடிகைகள் யாருமே இல்லை என்று சர்ச்சைக்கு பெயர் போன கங்கனாவை நடிக்க வைக்கிறாரா விஜய் என்று நெட்டிசன்கள் கோபம் அடைந்துள்ளனர். சிலரோ நடிப்பு ராட்சசியான கங்கனா தான் சரியான ஆள் என்கிறார்கள்.

ஜெயலலிதாவாக அனுஷ்கா அல்லது நயன்தாராவை நடிக்க வைத்திருக்கலாமே. போயும் போயும் கங்கனா ரனாவத் தான் கிடைத்தாரா என்று விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனத்திற்கு எல்லாம் பயப்படும் ஆள் கங்கனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷை சாவித்ரியாக நடிக்க வைத்தபோதும் இப்படித் தான் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ராசி தலைவி படத்திற்கும் ஒர்க்அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Leave a Reply