டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும் எய்ம்ஸ் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 – ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், டெல்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது. டெல்லியில் மட்டுமல்லாது போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் திடீரென தீப்படித்தது. இதையடுத்து தீ பரவி அவசர சிகிச்சை பிரிவு வரை சென்றது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை
எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி
