இவரை டீம்ல எடுங்க… உலக கோப்பை இந்தியாவுக்கு தான்… கொளுத்தி விடும் தமிழ் புலவர்

சென்னை:இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கும் முக்கியமான வீரராக ஜடேஜா இருப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். உலக கோப்பை மே 30ல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்ற ஐபிஎல் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. அந்த போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
சிஎஸ்கே வெற்றி
சேப்பாக்கம் ஆடுகளம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. ஆடுகளத்தில் வேகமே இல்லாததோடு பந்து நன்றாக ஸ்பின்னும் ஆனதால் பெங்களூரு அணி வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. 71 ரன்கள் என்ற இலக்கையே சிஎஸ்கே அணி 18வது ஓவரில்தான் எட்டியது
3 பேருக்கு 8 விக்கெட்டுகள்
போட்டியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய சிஎஸ்கே வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், மொயின் அலி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த வீரர்
போட்டிக்கு பின்னர் அவர் கூறியதாவது:ஜடேஜா போன்ற ஒரு வீரர் உலக கோப்பையில் இருக்க வேண்டும். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.


Leave a Reply